கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர் நாசர் எச்சரிக்கை

கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நா.மு. நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-05-16 09:12 GMT

அமைச்சர் ஆவடி நா.மு.நாசர்

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமைகத்தில் பொது மக்களுக்கு விலை குறைக்கப்பட்ட பாலை அமைச்சர் நாசர் விநியோகம் செய்தார். அப்போது பேசிய அவர், கலைஞரின் வழியில் பொறுப்பு எடுத்தவுடனேயே, 5 திட்டங்களை மக்களுக்காக அர்ப்பணித்தவர் முதலமைச்சர் .

உற்பத்தியை பெருக்கி, விற்பனையை அதிகரித்து ஆவின் பால் விலை குறைப்பால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட உள்ளோம். முதலமைச்சர் தன்னுடைய முதல் கையெழுத்திலேயே பால் விலையை குறைத்தது ஆனந்த கண்ணீரை வரவழைத்தது .

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலையில் ஆவின் பாலை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News