இளைஞர்களின் 'முதற் காதலி' : செல்போன் - எது பெஸ்ட்டா இருக்கும்?
இன்றைய இளைஞர்களின் முதல் காதலி அவர்கள் பயன்படுத்தும் செல்போன் தான் என்று கூறும் அளவுக்கு செல்போன்களில் மூழ்கி கிடக்கின்றனர்.;
இன்றைய நவீன இளைஞர்களின் 'முதற் காதலி' செல்போன் தான். மற்றதெல்லாம் பின்னாடிதான். கேர்ள் ஃபிரண்ட்களிடம் மொபைலை காட்டி இது சூப்பர் செஃல்பி எடுக்கும் தெரியுமா என்று பந்தாவாக ஹீரோயிசம் காட்டினால்தான் அன்றைய பொழுதே ஜாலியாகும்.
அதற்காகவே ஒரு புது மொழியை உருவாக்கியுள்ளனர். அதாவது 'பையன் காலையில் எந்திரிச்சி பல்லை தேய்க்கிறானோ.. இல்லையோ ..செல்லை தேய்க்கிறான்' என்பார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மையே. இதில் நன்மையும் உண்டு.தீமையும் உண்டு. அது நாம் பயன்படுத்துவதை பொறுத்தே அமையும்.
இந்த காலகட்டத்தில் நாம் விரும்பியவாறு தேர்வு செய்ய ஏராளமான சிறந்த கேமரா மொபைல் போன்கள் உள்ளன. வெவ்வேறு பட்ஜெட் மற்றும் மாறுபட்ட அம்சங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் போன்கள் சந்தையில் ஏராளமாக கிடைக்கின்றன. இதில் ஸ்மார்ட் போனை தேர்வு செய்வதில் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்கின்றனர். சிலர் கேமரா சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் தேர்வு சிறந்த கேமரா உள்ள போன்தான்.
செல்ஃபீ எடுத்து, ஃபிரண்டிகளிடம் பந்தா காட்டுவதற்கென்றே இளைஞர்கள் தேர்வு கேமரா அடிப்படையில் உள்ளது. இன்னும் சிலர் வீடியோ எடுப்பதில் எந்த ஸ்மார்ட் போன் கில்லாடீயா இருக்கும் என்று யோசிக்கின்றனர். அதற்காகவே இளைஞர்கள் ஏற்கனவே, ஒரு குறிப்பிட்ட போனை வாங்கியவர்களின் மதிப்புரையை நம்புகிறார்கள். அவர்களின் மதிப்புரையின் அடிப்படையில் ஸ்மார்ட் போனை தேர்வு செய்கின்றனர்.
இங்கு சில நம்பகமான மதிப்புரைகளின் அடிப்படையில், உங்களுக்கு ஏற்ற செல்போனை தேர்வுசெய்ய, சிறந்த கேமரா அடிப்படையிலான செல்போன்களை மதிப்பாய்வு செய்துள்ளோம்.
சாம்சங் கேலக்சி A52 -ன் சிறப்புகள்
டிஸ்பிலே 6.50-inch, 1080x2400 pixels
RAM 6ஜிபி
ஸ்டோரேஜ் - 128GB
பேட்டரி கெப்பாசிட்டி 4500mAh
பின் கேமரா 64MP + 12MP + 5MP + 5MP
முன் கேமரா 32MP
Rs.26,499
விலை கொஞ்சம் அதிகம். ஆனால், கேமரா சிறப்பு.
....................................
ரெட்மி நோட் 10 Pro Max -ன் சிறப்புகள்
டிஸ்பிலே 6.67-inch, 1080x2400 pixels
RAM 6GB
ஸ்டோரேஜ் 64GB
பேட்டரி கெப்பாசிட்டி 5020mAh
பின் கேமரா 108MP + 8MP + 5MP + 2MP
முன் கேமரா 16MP
Rs.19,999
ஓரளவு விலை ஏற்றுக்கொள்ளக் கூடியது. கேமராவும் நன்றாகவே இருக்கிறது.
...........................................................................................................................................................................
சாம்சங் கேலக்சி எஃப் 62 -ன் சிறப்புகள்
டிஸ்பிலே 6.70-inch, 1080x2400 pixels
RAM 6GB
ஸ்டோரேஜ் 128GB
பேட்டரி கெப்பாசிட்டி 7000mAh
பின் கேமரா 64MP + 12MP + 5MP + 5MP
முன் கேமரா 32MP
RS.23,999
இதுவும் விலை அதிகம். என்றாலும் கேமரா நன்று.
...........................................................................................................................................................................
விவோ V20 SE-ன் சிறப்புகள்
டிஸ்பிலே 6.44-inch, 1080x2400 pixels
RAM 8GB
ஸ்டோரேஜ் 128GB
பேட்டரி கெப்பாசிட்டி 4100mAh
பின் கேமரா 48MP + 8MP + 2MP
முன் கேமரா 32MP
Rs.19,990
இதன் விலை பரவாயில்லை. கேமராவும் நன்று.
...........................................................................................................................................................................
Poco X3 -ன் சிறப்புகள்
டிஸ்பிலே 6.67-inch, 1080x2340 pixels
RAM 6GB
ஸ்டோரேஜ் 64GB
பேட்டரி கெப்பாசிட்டி 6000mAh
பின் கேமரா 64MP + 13MP + 2MP + 2MP
முன் கேமரா 20MP
Rs.14,999
இதன் விலை இளைஞர்களை கவரும். கேமராவும் சிறப்பே.
………….
இதில் கேமரா மற்றும் பிற பிரிவுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. உங்களுக்கு பிடித்ததை நீங்கள் மதிப்பீடு செய்து தேர்வு செய்யலாம் ப்ரோ. அதாவது உங்களின் முதல் காதலியை தேர்வு செய்யலாம். விலை மாறுபடலாம்.