மின்தடை கண்டித்து மக்கள் சாலை மறியல்!
அம்பத்தூர் அயப்பாக்கத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை கண்டித்து அப்பகுதி மக்கள் திருவேற்காடு சாலையில் திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு.
அம்பத்தூர் அயப்பாக்கத்தில் அதிக அளவில் மின் தடை ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் திருவேற்காடு செல்லும் சாலையில் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த அம்பத்தூர் அயப்பாக்கம் பகுதியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகிறனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் முற்றிலும் மின்சாரம் அதிக அளவில் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாக இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் நேற்று 9.மணி அளவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் இரவு 11 மணி வரை மின்சாரம் வழங்கப்படவில்லை என்று கூறி அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி அம்பத்தூரில் இருந்து திருவேற்காடு செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் சமரசம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனை ஏற்க மறுத்த பகுதி மக்கள் இரவு 12.30 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்பு காவல்துறையினர் சமரசம் செய்து விரைந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். எப்பொழுதும் போக்குவரத்து அதிகம் இருக்கக்கூடிய திருவேற்காடு நெடுஞ்சாலையில் இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு ஏற்பட்டதால் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர்.