100 மீது விரைந்து நடவடிக்கை - ரோந்து காவலர்கள் அறிமுகம்

Update: 2021-03-06 05:30 GMT

அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் எண் 100-க்கு வரும் அழைப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கூடுதலாக ரோந்து காவலர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் போலீசின் 100 எண்ணுக்கு வரும் அழைப்புகளுக்கு, விரைவாக சம்பவ இடம் அடைந்து, துரிதமாக நடவடிக்கை எடுப்பதற்காக அரியலூர் மாவட்டத்தில் உள்ள 16 காவல் நிலையங்கள் தோறும் ரேஸ் குழு செயல்பட்டு வருகிறது. தற்போது தேர்தலை கருத்தில் கொண்டும், 100க்கு வரும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படாவண்ணம் கண்காணிக்கவும் கூடுதலாக முக்கியமான 10 காவல் நிலையங்களில் ரோந்து காவலர்கள் (Bike Patrol) அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அரியலூர் மாவட்ட எஸ்பி., பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் குறித்து மாவட்ட எஸ்பி., பாஸ்கரன் கூறுகையில், இந்த ரோந்து காவலர்கள் 24 மணி நேரமும் வாக்கிடாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். மக்கள் 100 ஐ தொடர்பு கொண்டு தனது புகாரை அளித்தவுடன் 15 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவார்கள். பின்னர் ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்வார்கள். பிரச்சனையின் தீவிரத்தை காவல் நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.

இதன் மூலம் மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுத்து நிறுத்தப்படும் மற்றும் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும். 100க்கு தகவல் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். அதனால் மக்கள் அச்சம் தவிர்த்து, அவர்கள் பகுதியில் நடைபெறும் எவ்வித குற்ற சம்பவமாக இருந்தாலும் காவல் துறைக்கு தகவல் அளிக்கலாம் என்று கூறினார்.

Tags:    

Similar News