LCUவில் இணைகிறார் ரஜினிகாந்த்? மிகப் பெரிய அப்டேட் இதோ!

தனக்கு விக்ரம் மாதிரி அதைவிட பெரிய அளவில் ஒரு படம் பண்ண வேண்டும் என கேட்க, தற்போது தான் சிக்கலில் இருப்பதை அவரிடம் விளக்கியிருக்கிறார். காரணம் எஸ் ஆர் பிரபு மற்றும் கமல்ஹாசன் இருவரும்தான்.

Update: 2023-02-16 09:45 GMT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் மிகப் பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் நடிக்கப்போகிறாராம். அது ராஜ்கமல் இண்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சூர்யா, கார்த்தி, கமல்ஹாசன், விஜய், விஜய் சேதுபதி, விக்ரம் ஆகியோரைத் தொடர்ந்து கடைசியில் ரஜினிகாந்தும் எல்சியூவில் இணைகிறார் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து இந்த படத்தில் நடிக்கிறாரா அல்லது வேறு சில படங்களில் நடித்து முடித்துவிட்டு தனது கடைசி படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறாரா என்பது தெரியவில்லை.

கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படத்தைக் கொடுத்து லோகேஷ் கனகராஜ் பலரது தூக்கத்தைக் கெடுத்துவிட்டார் என்றே சொல்லலாம். கமல்ஹாசனின் நேரடி போட்டியாளரான ரஜினிகாந்துக்கு இது போல ஒரு சூப்பர் ஹிட் படத்தை நாமும் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் தான் தற்போது ஜெயிலரில் பல்வேறு மாநில நடிகர்களையும் எடுத்து போடுவது என இருக்கிறார் போல. அப்படி அவர் திட்டமிட்டது ஒரு பக்கம் இருக்க, நெல்சன் இயக்கும் படத்தின் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லாமல் ரஜினிகாந்த் த செ ஞானவேல் ஒரு பக்கம், தேசிங்கு பெரிய சாமி ஒரு பக்கம் என்று அடுத்தடுத்த இயக்குநர்களிடம் கதை கேட்கும் படலத்தைத் தொடங்கியிருக்கிறார்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜை தான் காண விரும்புவதாக கூறி ரஜினிகாந்த் தனது மேனேஜர் மூலம் தொலைபேசியில் அழைத்து அவரை நேரில் வர கேட்டிருக்கிறார். அப்போது அவர் தளபதி 67 பட வேலைகளில் தொடக்க நிலையில் இருந்தாராம். இதனால் மீண்டும் ஒரு நாள் சந்திக்கிறேன் சிரமத்துக்கு மன்னிக்கவும் என கூறி, வேறொரு நாளில் ரஜினிகாந்தை சந்தித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

தனக்கு விக்ரம் மாதிரி அதைவிட பெரிய அளவில் ஒரு படம் பண்ண வேண்டும் என கேட்க, தற்போது தான் சிக்கலில் இருப்பதை அவரிடம் விளக்கியிருக்கிறார். காரணம் எஸ் ஆர் பிரபு மற்றும் கமல்ஹாசன் இருவரும்தான்.

கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் துவங்க திட்டமிட்டிருந்தனர். இப்போது லியோ படத்தை முடித்துவிட்டு இந்த படத்துக்கு வருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார் லோகேஷ். இதனால் விஜய் படம் முடிந்த அடுத்த நாளே எஸ் ஆர் பிரபு கம்பெனியில் ஆஜர் ஆக வேண்டும். அதன்பிறகு கமல்ஹாசன் அவர்கள் மணிரத்னம் இயக்கும் படம் முடிந்த பிறகு அவரை வைத்து விக்ரம் 2 இயக்க வேண்டும் என கூறியிருக்கிறார் இதனால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு தன்னால் நகர முடியாது என போட்டு உடைத்திருக்கிறார்.

இதனை கேட்ட ரஜினிகாந்த் கமல் கிட்ட நான் பேசிக்கிறேன்பா.. நம்ம நண்பர் நாம என்ன சொன்னாலும் ஒத்துக்குவாரு. நமக்கு வேற உடல் நல பிரச்னை இருக்கு, வேணும்னா ராஜ்கமலுக்கே பண்ணிடுவோம்னு சொல்ல கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசன் சார ரஜினி சார் சமாளிச்சிப்பாருன்னா, நாம எஸ் ஆர் பிரபு சார சமாதான படுத்தணும். அப்படி இல்லைனாலும் 4 மாசத்துல படத்த முடிச்சிட்டு தீபாவளிக்கு வந்துடலாம்னு யோசிக்கிறேன்னு ரஜினியிடம் சொல்ல, சரி நான் கமல்கிட்ட பேசுறேன்னு சொல்லிட்டாராம்.

அடுத்து கமல்ஹாசன் - ரஜினிகாந்த் நேர்லயோ தொலைபேசி வழியாவோ பேச வாய்ப்பு இருக்கு. பேசி ஒரு முடிவுக்கு வந்தா சீக்கிரம் ரஜினி லோகேஷ் படம் துவங்கும். இல்லன்னா கொஞ்சம் தாமதமாகும். ஆனா இது மட்டும் உறுதி. ரஜினிகாந்த் தன்னோட கடைசி படமா மிகப் பெரிய ஹிட் படம் ஒன்ன எதிர்பார்க்குறாரு. 

Tags:    

Similar News