முறையற்ற குடிநீர் இணைப்பு துண்டிக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

முறையற்ற குடிநீர் இணைப்பு துண்டிக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
X

ஜல் ஜீவன் மிஷன் குறித்த ஆய்வு கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது. 

சல்ஜீவன் மிஷன் திட்ட கூட்டத்தில் முறையற்ற குடிநீர் இணைப்பை துண்டிக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

முறையற்ற குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புற பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2023-24-ம் ஆண்டிற்குள் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும், கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் 55 லிட்டர் தரமான, பாதுகாப்பான குடிநீர் வினியோகிப்பது இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

இந்த குடிநீர் வினியோக திட்டத்தில் மக்கள் ஒவ்வொருவரின் பங்கினை உருவாக்கிடும் வகையில் திட்ட மதிப்பீட்டில் குறிப்பிட்ட பங்களிப்பு தொகையை பெற்று பொதுமக்களையும் திட்ட செயல்பாட்டில் ஈடுபடுத்த வேண்டும்.

இத்திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்த அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமங்களில் பணி மதிப்பீட்டில் 5 சதவீத சமூக பங்களிப்பு தொகையும், இதர கிராமங்களில் 10 சதவீத சமூக பங்களிப்பு தொகையும் வசூல் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் 84 ஊராட்சிகளில் மொத்தம் 36 ஆயிரத்து,234 வீட்டு குடிநீர் இணைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.30.23 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள 35 ஆயிரத்து,458 முறையற்ற குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்திடவும், அதற்கான வைப்பு தொகையை வசூல் செய்திடவும், முறைப்படுத்தப்பட்ட குடிநீர் இணைப்புகளுக்கான ஆதார் விவரங்களை இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். முறையற்ற குடிநீர் இணைப்பை முறைப்படுத்த முன்வர தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் திட்டத்தின் கீழ் பல்வேறு கிராமங்களில் பணி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் மாவட்டத்தில் அடிக்கடி திடீர் மழை பெய்து வருவதால் இத்திட்டம் ஆங்காங்கே நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, அதனால் குடிநீர் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது,இத்திட்டத்தினால் ஏற்கனவே போடப்பட்டுள்ள சிமெண்ட் ரோடுகளை ஜேசிபி எந்திரம் கொண்டு உடைக்கப்படுவதால் மழைக்காலங்களில் அப்பகுதிகள் சேறும் சகதிகமாக மாறும் நிலையும் உள்ளது, என்பதால் சல்ஜீவன் திட்டத்தை வேகமாக பருவமழைக்கும் முன்பு முடித்து ஆங்காங்கே உடைக்கப்படும் கிராமத்தின் தெருக்களின் சிமெண்ட் சாலைகளை மறுபடியும் அமைக்க வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!