ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுவாமி தரிசனம்..!

ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுவாமி தரிசனம்..!

தலைமை நீதிபதிக்கு கோவில் பிரசாதங்கள் வழங்கிய அறங்காவலர் குழு தலைவர் மற்றும் சிவாச்சாரியார்கள்

ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுவாமி தரிசனம் செய்தாா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொ) மகாதேவன் சுவாமி தரிசனம் செய்தாா்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். வி. கங்காபுர்வாலா கடந்த 23-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, மூத்த நீதிபதி மகாதேவனை, பொறுப்பு நீதிபதியாக நியமித்து, தலைவர் திரவுபதிமுர்மு உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.

இந்நிலையில், நேற்று திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோவிலில் தலைமை நீதிபதி மகாதேவன் சுவாமி தரிசனம் செய்தார்.

அவரை கலெக்டர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட நீதிபதி மதுசூதனன், கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து தனது குடும்பத்துடன் சம்பந்த விநாயகா்,அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன்,நவகிரக சந்நிதிகளில் தரிசனம் செய்தாா்.

அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு நடைபெற்ற பூஜையிலும் அவா் குடும்பத்தினருடன் கலந்து கொண்டாா். இதன்பிறகு, கோயில் வளாகத்தில் அவா் மரக்கன்றுகளை நட்டார்.

அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள், சிவாச்சாரியார்கள் அருணாச்சலேஸ்வரர் கோயில் பிரசாதங்களை வழங்கினார்.

திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்

உலக பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாக கருதக் கூடியதுமான அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரையாக திருவண்ணாமலை நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வருகை அதிகரித்ததால் வழக்கம்போல் சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன

பக்தர்கள் சென்ற தரிசன வழியானது கோவிலுக்கு மட்டும் இன்றி கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள தென் சன்னதி தெரு வரை நீண்டு காணப்பட்டது. மேலும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story