திருவள்ளூர் அருகே இளைஞர் வெட்டி கொலை!

திருவள்ளூர் அருகே இளைஞர் வெட்டி கொலை!
X
திருவள்ளூர் அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறு இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு.

ஏரிக்கரை ஓரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகறாறில் சதீஷ் என்பவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முரளி என்பவர் வெட்டு காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலையாளிகளை மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் நடைபெற்ற விசாரணைக்கு பின் பேட்டி.

திருவள்ளூர் அடுத்த மோவூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் ( வயது 28). இவர் மணவாள நகர் எம்ஜிஆர் நகரில் உள்ள தனது அக்கா வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வெங்கத்தூர் ஏரிக்கரை ஓரத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் சதீஷ் மற்றும் அவரது நண்பர் முரளி ஆகியோரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நண்பர்கள் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் அங்குள்ள வெங்கத்தூர் ஏரிகரை அருகே சதீஷ் உடல் இருப்பதைக் கண்ட பொதுமக்கள் மணவாள நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் மதுபோதையில் வெட்டு காயங்களுடன் மயக்க நிலையில் இருந்த முரளி என்பவரை மீட்டு உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் அழகேசன் ஆய்வாளர் ரவிக்குமார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ராக்க்ஷி மற்றும் தடையவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தடையங்களை சேகரித்தனர் .

சம்பவத்தில் நேரில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் கொலை நடைபெற்றது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொலை குற்றவாளிகளையும் கொலைகாண காரணம் குறித்தும் விசாரணை செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தெரிவித்தார். மேலும் சம்பவ இடத்தில் மோப்பநாய் ராக்ஷி சூர்யா என்பவரது வீட்டு வரை சுமார் 500 மீட்டர் வரை ஓடிச் சென்று வீட்டுக்குள்ளேயும் வீட்டைச் சுற்றியும் சுற்றி வந்து நின்றது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இளைஞரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!