தனியார் டிரஸ்ட் சார்பில் நலத்திட்ட உதவிகள்

தனியார் டிரஸ்ட் சார்பில் நலத்திட்ட உதவிகள்
X
பெரியபாளையத்தில் தனியார் டிரஸ்ட் சார்பில பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பெரியபாளையத்தில் வேர்ல்ட் அறக்கட்டளை மற்றும் லிட்டரஸி இண்டியா அறக்கட்டளை இணைந்து நடத்திய முப்பெரும் விழாவில் தணிகை ரியல் எஸ்டேட் உரிமையாளர் எம்.ஆர்.தென்னரசு பங்கேற்பு.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் வேர்ல்ட் அறக்கட்டளை மற்றும் லிட்டரஸி இண்டியா அறக்கட்டளை இணைந்து முப்பெரும் விழா நிகழ்ச்சியை நடத்தினர். இதில்,முதியோர் கல்வி கற்கும் பத்து நபர்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்குதல்,முதியோர்களுக்கு கல்வி கற்பிக்கும் பத்து ஆசிரியர்களை கௌரவித்து நினைவு பரிசு வழங்குதல்,21 தூய்மை பணியாளர்களுக்கு பெட்ஷீட்,குடை,மரக்கன்றுகள் உள்ளிட்டவை அடங்கிய நலத்திட்ட உதவி வழங்குதல் என முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு,வேர்ல்ட் டிரஸ்ட் இயக்குனர் டாக்டர்

பி.ஜெயஸ்ரீ பரசுராமன் தலைமை தாங்கினார். அனைவரையும் பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜி.டி.வேலுமயில் வரவேற்றார்.


பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஐ.ஏழுமலை, பெரியபாளையம் கே.நந்தன், கவிஞர் திராவிடமூர்த்தி,ஜி.ரஜினாமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். லிட்டரஸி இண்டியா டிரஸ்ட் சார்பாக முதியோர் கல்வி கற்கும் பத்து நபர்களுக்கு தையல் இயந்திரங்களை சென்னை எம்.கே.பி நகரில் இயங்கி வரும் தணிகை ரியல் எஸ்டேட் உரிமையாளர் எம்.ஆர்.தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி சிறப்புரையாற்றி பேசினார்.இதன் பின்னர், முதியோர்களுக்கு கல்வி கற்பிக்கும் பத்து ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் புத்தகம்,தட்டு உள்ளிட்டவை அடங்கிய நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும்,21 தூய்மை பணியாளர்களுக்கு பெட்ஷீட்,குடை,மரக்கன்றுகள் உள்ளிட்டவைகளை நலத்திட்ட உதவியாக வழங்கினர். இந்நிகழ்ச்சியில்,தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் எ.குமார், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ரமேஷ், எல்லாபுரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் வழக்கறிஞர் கே.சுரேஷ்,ஓய்வு பெற்ற மின்வாரிய துறை அதிகாரி கவிஞர் ராமச்சந்திரன், நேதாஜி மக்கள் மன்ற தலைவர் டி.தேவராஜ், மின்வாரிய துறை அதிகாரி ஆர்.மகாலிங்கம், பெரியபாளையம் கே.சத்தியமூர்த்தி,தேர்வாய் திட்ட அலுவலர் கே.உதயகுமார்,மாம்பாக்கம் திட்ட அலுவலர் கே.தேவி,வேர்ல்ட் டிரஸ்ட் செயலாளர் நவீன் குமார், தேமுதிக ஒன்றிய செயலாளர் சுகுமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில், பரசுராமன் நன்றி கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!