பெயிண்ட் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு!

பெயிண்ட் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு!
X
திருவள்ளூர் அருகே காக்களூர் தொழில் பேட்டையில் பெயிண்ட் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூன்று பேர் மீட் பணியில் மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள்.

திருவள்ளுர் அடுத்த காக்களுர் தொழிற்பேட்டையில் உள்ள ஜென் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தும் மற்றொருவர் தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளுர் அடுத்த காக்களுர் தொழிற்பேட்டையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது இந்த தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பகுதியில் உள்ள ஜென் பெயிண்ட் தொழிற்சாலையில் இதில் (சோபனா, வயது 36) (சுகந்தி வயது 56) ,,பார்த்தசாரதி ,(புஷ்கர் வயது 40) என நான்கு பேர் வழக்கமாக பனியில் இருந்து வந்தனர்.

திடீரென மின் கசிவு காரணத்தினால் ஏற்பட்ட தீ விபத்தில் உள்ளே பணியில் இருந்த 4 பேரில் சோபனா மட்டும் வெளியே தப்பித்து வந்துள்ளார். தீ மல மல பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பார்த்தசாரதி ,சுகந்தி, புஷ்கர் நிலை என்னவென்று தெரியாமல் இருந்து வந்தது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த இரண்டு உடல்களை மட்டும் எலும்பு கூடாக மீட்டெடுத்தனர். மேலும் மற்றவர் நிலை என்னவென்று தெரியவில்லை கான்கிரீட் சுவர்கள் இடிந்து கட்டடத்துக்குள் விழுந்திருப்பதால் இரவு நேரம் என்பதால் மீட்பு பணி தொய்வு ஏற்பட்டிருப்பதால் அந்த உடலை கண்டு பிடிப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் தீ விபத்து ஏற்பட்டு பாய்லர் வெடித்து சிதறியதில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் தொழிற்சாலை ஊழியர் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் நடந்த இடத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.


பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் தொழிற்சாலையில் 4 பேர் பணியாற்றியதில் மூவர் உயிரிழந்தோம் ஒருவர் சிகிச்சையிலும் இருந்து வருவதாகவும் அவர் கூறினார். மூவரில் இருவர் உடல் எரிந்து எலும்பு கூடாக இருப்பதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதால் பிரேத பரிசோதனை பிறகு அது ஆணா பெண்ணா என்பது தெரிய வரும் என அவர் கூறினார்.

மேலும் தொழிற்சாலையின் நிர்வாக உரிமையாளர் கணபதி கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தொழிற்சாலை சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டிருந்தால் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

மேலும் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!