108 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை!
பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயிலில் வைகாசி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் சுழம்புவாக எழுந்தருளியே பிரசித்தி பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் தொடங்கி 15 வார காலம் வெகு விமர்சையாக நடைபெறும், இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தமிழகம் மட்டுமல்லாது
ஆந்திரா, கேரளா,கர்நாடகா, என பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை பேருந்து மற்றும் சொந்த வாகனங்களில் பெரியபாளையம் வந்து வாடகைக்கு விடுதிகளை எடுத்து தங்கி சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரும் மொட்டை அடித்துக் கொண்டு பொங்கல் மண்டபத்தில் வாடை பொங்கல் வைத்து ஆடு, கோழி என பலியிட்டு கோவில் வளாகத்தில் உள்ள வேப்பமரத்து அடியில் படையல் இட்டு உடல் முழுவதும் வேப்பஞ்சலை ஆடைகளை அணிந்து தேங்காய் கையில் எடுத்து கோவில் சுற்றி வளம் வந்து இலவச தரிசனம் கட்டண தரிசனத்தில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வைகாசி மாதம் பௌர்ணமி முன்னிட்டு உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நோய் நொடி இன்றிவாழவும், பெரியபாளையம் பவானி அம்மன் ஆலய வளாகத்தில் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை விமர்சியாக நடைபெற்றது.பூஜையில் கலந்துகொண்ட பெண்கள் குத்து விளக்கேற்றி குங்குமம்,மலர்களால்அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டினர்.
முன்னதாக மூலவருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர்,இளநீர், ஜவ்வாது,சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால், திரு ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஶ்ரீ பவானி அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ பவானி அம்மன் நின்ற கோலத்தில் வெள்ளி காப்பு அலங்காரத்தில் கோயிலை மூன்று முறை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu