சர்வதேச விண்வெளி மையம் சென்று தாயகம் திரும்பிய மாணவிக்கு வரவேற்பு..!
ரஷ்யாவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று தாயகம் திரும்பிய மாணவி இவாஞ்சலினிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுவானுர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் பூபாலன், சரஸ்வதி தம்பதியின் மகள் இவாஞ்சலின். இவர் திருப்பாச்சூரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்
இந்நிலையில் பத்ம பூஷன் சிவதானுப்பிள்ளை, அகத்தியர் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட ராக்கெட்(science) சயின்ஸ் என்னும் இணைய வழிக் கல்வியில் இணைந்து பயின்று வந்த நிலையில் பல்வேறு இணைய வழி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையமான ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின், என்ற விண்வெளி மையத்துக்கு செல்ல தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 50. மாணவர்களில் திருவள்ளூர் மாவட்டம் சேர்ந்த இவாஞ்சலின் -ம் ஒருவர் ஆவார். .
இதைதொடர்ந்து கடந்த அக்டோபர் 29.ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் மேற்கொண்ட மாணவி இவாஞ்சலின் அங்கு பார்வையிட்டு சில பயிற்சிகளை பெற்று செப்டம்பர் 7 தேதி இரவு சொந்த ஊரான திருவள்ளூர் அடுத்த சிறுவானுர், கிராமத்திற்கு திரும்பினார். ஊர் திரும்பிய மாணவிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர், பூண்டி ஒன்றிய செயலாளர் ராஜா, ஆகியோர் ந சந்தன மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
பின்னர் ஊர் மக்கள் ஒன்று கூடி மேளதாளத்துடன் நடனம் ஆடி மாணவியை அழைத்து சென்றனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய பொருளாளர் சிவா, மருத்துவர் அணி அமைப்பாளர் பாலாஜி, மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் இதில் கலந்து கொண்டனர்
இது குறித்து மாணவி இவாஞ்சலின் கூறும் போது, கிராமத்தில் ஏழை மாணவியாக பிறந்தும் இந்த சிறிய வயதில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று பார்வையிட்டு வந்தது எனக்கு கனவு போல் உள்ளது என்றும் இந்த பயண அனுபவம் என்னுடைய வருங்கால கல்விக்கு மிகவும் பேருதவியாக இருக்கும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu