பராமரிப்பு பணிகளுக்காக கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் மூடல்
மீஞ்சூர் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் மூடல். சென்னைவாசிகளுக்கு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு. குடிநீர் வாரியம் அறிவிப்பு.
திருவள்ளூர் மாவட்டம், சென்னை அடுத்த காட்டுப்பள்ளியில் மீஞ்சூர் கடல் நீரை குடிநீராகும் சுத்தகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீருக்காக சுத்திகரிக்கும் திறன் கொண்ட , இந்த சித்தரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் வருகின்ற 26 ஆம் தேதி காலை 10மணி தொடங்கி 28 ஆம் தேதி காலை 10மணி வரை இரண்டு நாட்களுக்கு சுத்தகரிப்பு நிலையம் செயல்படாது என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
எனவே மாற்று ஏற்பாடுக்காக, மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி, ஆகிய சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு புழல் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, தேவையான குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவசர தேவைகளுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu