குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு..!

குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு..!
X

திருவள்ளூரில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி 

சீத்தஞ்சேரியில் குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

ஊத்துக்கோட்டை அருகே ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா சீத்தஞ்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் கலந்துகொண்டு திமுக ஆட்சியின் பெண்களுக்கு செய்து வரும் சாதனைகளை எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து 60 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் சீர்வரிசை அடங்கிய தொகுப்பினை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியில் பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே. சந்திரசேகர், வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான் என்கிற பொன்னுசாமி, ஊத்துக்கோட்டை நகர செயலாளர் அபிராமி குமரவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வெற்றி, மாவட்ட துணை ச் செயலாளர் கதிரவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ் ,உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களுக்கு உதவும் வகையில் அரசு கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி அளிப்பதுடன், வளைகாப்பு நிகழ்ச்சிகளும் நடத்தி அவர்களின் மகிழ்ச்சியான பிரசவத்துக்கு உதவுகிறது. இது குறிப்பாக அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களை ஒருங்கிணைத்து சமுதாய வளைக்கப்பாக நடத்தப்படுகிறது.

Tags

Next Story
ai in future agriculture