லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி உதவியாளர் கைது!

லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி உதவியாளர் கைது!
X
திருவள்ளூர் அருகே வரன் முறைப்படுத்த 5. லஞ்சம் வாங்கிய பூண்டி வட்டார வளர்ச்சி உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் அடுத்த பூண்டி அருகே நிலம் வரன்முறைப்படுத்த ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி் அலுவலக உதவியாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த நேமம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில்குமார். இவர் பூண்டி ஒன்றியம் கைவண்டூர் கிராமத்தில் 1200 சதுர அடி வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த பஞ்சாயத்து வீட்டுமனையை டிடிசிபி மனையாக வரன்முறைப்படுத்த வேண்டும் என்பதற்காக பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த அலுவலக உதவியாளர் விஜயகுமார் என்பவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் நிலம் வரன்முறைப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுனில்குமார் திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ. 5 ஆயிரத்தை இன்று பிற்பகல் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நிலத்தின் உரிமையாளர் சுனில்குமார் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக விஜயகுமாரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ராமச்சந்திரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் மாலா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தமிழ் அரசு தலைமையிலான போலீசார் ரூ.5 ஆயிரத்தை விஜயகுமார் கையில் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில் அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம் இல்லாத எந்த ஒரு வேலையும் நடப்பதில்லை என்றும், அரசு வழங்கும் வீடுகளை பெற வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கமிஷன் கொடுத்தால் மட்டும்தான் வீடு கிடைக்கும் என்று, முறையாக அனைத்து ஆவணங்கள் தகுதியும் இருந்தாலும் அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் கிடப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும், இது மட்டுமல்லாமல் வருவாய்த் துறையில் இறப்பு சான்றிதழை வாங்க சென்றாலும் ரூபாய் 200 முதல் 500 ரூபாய் வரை வசூலிப்பதாகவும் இது போன்ற லஞ்ச லாபங்கள் வாங்கும் அரசு அதிகாரிகள் மீது கடினமான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இது போன்ற லஞ்ச லாவண்யங்கள் குறையும் என்று பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!