சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி!

சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி!
X
திருவள்ளூர் பூங்கா நகரில் சமீபத்தில் பெய்த மழை நீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்தி வடிகால் கால்வாய் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூரில் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர்

தொற்று நோய் ஏற்படும் அபாயத்தில் பொதுமக்கள். மக்களின் நலனை கருதி உடனடியாக மழைநீர் வடிகால் கால்வாயை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை.


திருவள்ளூர் மாவட்டம், பூங்கா நகர் பூஞ்சோலை தெருவில் சுமார் 4000க்கும் மேற்பட்ட மக்கள் வசதி வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள கால்வாய் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்து சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை புயல் காரணமாக மழை நீர் வெளியேற வசதி இல்லாமல் இந்த தெரு முழுவதும் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.


இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. குறிப்பாக மழைநீர் அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் முழ்கடித்து, முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது. தற்போது இதில் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வீடுகளுக்குள் பாம்பு ,தேள் ,பூரான் போன்ற விஷம் நிறைந்த பூச்சிகளும் வீடுகளுக்குள் வந்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.


மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் தாங்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் இவ்வழியை பயன்படுத்துகின்றனர். இது மட்டுமில்லாமல் சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் அதில் உள்ள பள்ளங்கள் அடையாளம் காண முடியாமல் அதனை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், வயதான முதியோர்கள் தடுக்கி விழுந்து காயங்கள் ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே திருவள்ளூர் பூங்கா நகர் பூஞ்சோலை தெருவில் சாலையில் தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்தி இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் மழை நீர் வடிகால்வாய் அமைத்து தரவேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்றவற்றை மீண்டும் அரசிடம் ஒப்படைக்க போவதாக தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!