இந்திய குடியரசு கட்சியின் மண்டல அலுவலகம் திறப்பு விழா..!

இந்திய குடியரசு கட்சியின் மண்டல அலுவலகம் திறப்பு விழா..!
X

 இந்திய தேசிய குடியரசு கட்சி தேசிய பொதுச்செயலாளர்  லயன் டாக்டர்.மருது பாண்டியன் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்,\.

திருவள்ளூரில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மண்டல அலுவலகத்தை பொதுச் செயலாளர் மருது பாண்டியன் திறந்து வைத்தார்.

மாநில தலைவர் தமிழ்நேசன் ஆணைக்கிணங்க இந்திய குடியரசு கட்சி சார்பில் திருவள்ளூரில் மண்டல அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள நிலையில் இந்திய குடியரசு கட்சியும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளன.

அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர்-ஆவடி நெடுஞ்சாலை அருகேயுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் மண்டல செயலாளருமான இராமஞ்சேரி சங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மனிதவள மேம்பாடு அறக்கட்டளை தலைவரும், இந்திய தேசிய குடியரசு கட்சி தேசிய பொதுச்செயலாளருமான லயன் டாக்டர்.மருது பாண்டியன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார்


பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தமிம்,மாநில துணை பொதுச்செயலாளர் லயன் டாக்டர் விஸ்வநாதன், மாநில பொருளாளர் ரவி,மாநிலச் செயலாளர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர் திலீப் குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!