ரவுடிகளை சுட்டுக்கொன்ற போலீசாரிடம் தனித்தனியாக விசாரணை..!

ரவுடிகளை சுட்டுக்கொன்ற போலீசாரிடம் தனித்தனியாக விசாரணை..!
X

பொன்னேரி சார் ஆட்சியர ஐஸ்வர்யா போலீசாரிடம்  விசாரணை நடத்தினார். 

அண்மையில் சோழவரம் பகுதியில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு ரவுடிகள் விவகாரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்களிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

சோழவரத்தில் 2 ரவுடிகளை காவல் துறையினர் சுட்டுக் கொன்ற வழக்கு தொடர்பாக பொன்னேரி சார் ஆட்சியர ஐஸ்வர்யா விசாரணை நடத்தினார். துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்த அவர் துப்பாக்கி சூடு நடத்திய காவலர்களிடம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே மாரம்பேடு பகுதியில் கடந்த 12-ஆம் தேதி ரவுடிகள் முத்து சரவணன், சதீஷ் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கொலை வழக்கில் ரவுடிகள் முத்து சரவணன், சதீஷ் ஆகியோர் தப்பி சென்று தலைமறைவான நிலையில், பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் ஜவஹர் தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள், ஒரு உதவி ஆய்வாளர், 3 காவலர்கள் கொண்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 12-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த மாரம்பேடு பகுதியில் பாழடைந்த பங்களாவில் ரவுடிகள் இருவரும் பதுங்கி இருபபதாக வந்த தகவலையடுத்து தனிப்படை காவலர்கள், ரவுடிகளை சுற்றி வளைத்த போது, காவலர்கள் மீது ரவுடிகள் துப்பாக்கியால் சுட்ட போது, 3 காவலர்கள் காயமடைந்தனர்.அப்போது தற்காப்புக்காக காவலர்கள் திருப்பி சுட்டதில் ரவுடிகள் முத்து சரவணன் மற்றும் சதீஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.


இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தினர். ஆவடி காவல் ஆணையர் சங்கர், தடயவியல் வல்லுநர்கள், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.அப்போது பொன்னேரி பொறுப்பு சார் ஆட்சியாக இருந்த கௌசல்யா துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து 2 துப்பாக்கிகள், தோட்டாக்களை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், விடுப்பில் இருந்த சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தார்.அப்போது துப்பாக்கி சூடு எப்படி நடத்ப்பட்டது? எவ்வளவு தூரத்தில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது? காயமடைந்த காவலர்களின் நிலை குறித்தெல்லாம் கேட்டறிந்தார்.

பின்னர், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா விசாரணை நடத்தினார். அப்போது துப்பாக்கி சூடு நடத்திய தனிப்படை காவல் துறையை சேர்ந்த பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் ஜவஹர், காவல் ஆய்வாளர்கள் ரமேஷ், சாய்கணேஷ், உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், பிரபு ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினார்.

பின்னர் ஒவ்வொருவரும் எழுத்துபூர்வமாக அறிக்கை சமர்ப்பிக்க அவர் உத்தரவிட்டார்.அதனடிப்படையில், ஒவ்வொரு காவலரும் எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளித்தனர். அறிக்கைகளை பெற்றுக்கொண்ட பின், அவை திருவள்ளூர் ஆட்சியருக்கு அனுப்பப்படும் எனவும், பின்னர் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Xiaomi வெளியிட்ட புது AC + Heater மாடல்....!  ஒரே கல்லுல ரெண்டு மாங்கா...!