உலக நீரழிவு நோய் தினத்தை முன்னிட்டு பேரணி!

உலக நீரழிவு நோய் தினத்தை முன்னிட்டு பேரணி!
X
திருவள்ளூரில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர் அருகே உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி ஈக்காடு ஷம்மா, தனியார் மருத்துவமனை மற்றும் சலோம் ரீஹேப் சென்டர் ஆகியவை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு ஊராட்சி ஒன்றியம்,ஈக்காடு ஊராட்சி பகுதியில் உள்ள ஷம்மா தனியார் மருத்துவ மனையின் உரிமையாளரும் இந்திய மருத்துவர் சங்க திருவள்ளூர் தனியார் மருத்துவமனைகளின் செயலாளருமான டாக்டர் பிரேம்குமார் தலைமையில் உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இப்பேரணியில்சிறப்பு அழைப்பாளராக ஈக்காடு ஊராட்சி மன்ற தலைவர் லாசன்னா சத்யா கலந்துகொண்டு கொடியாசித்து பேரணியை தொடங்கி வைத்தார்.


இப்பேரணியில் திருவள்ளூர் சிஎஸ்ஐ பள்ளி மாணவி, மாணவர்கள் கலந்து கொண்டுநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்களான ஆரோக்கியமான உணவு, முறையான பச்சை கீரை மற்றும் காய்கறிகளை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகர்கள் எழுதப்பட்ட பதகைய கையில் ஏந்தி கோஷம் எழுப்பியவாறு ஈக்காடு பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று ஷம்மா மருத்துவமனை வந்தடைந்தது.இந்நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் மாநில நிர்வாகி பன்னீர்செல்வம், வழக்கறிஞர் பிரபாகரன், சிஎஸ்ஐ வேஸ்ட்லி சர்ச் பொருளாளர் ஹாரிஸ், சிஎஸ்ஐ பள்ளி என்சிசி மாஸ்டர் இன்பராஜ், அதிமுக நிர்வாகி விஜயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!