திருவள்ளூர்,புளரம்பாக்கம் பெருமாள் கோவிலில் புரட்டாசி 4வது வார சனிக்கிழமை பூஜை..!
திருவள்ளூர், பூண்டி அருகே புல்லரம்பாக்கம், அம்பேத்கர் நகர் பெருமாள் கோவிலில் பெருமாள் சர்வ அலங்காரத்துடன் காட்சிதருகிறார்.
புரட்டாசி மாதம் பொதுவாக இந்துக்கள் புனிதமான மாதமாக கருதி கோவில்களில் வழிபாடு செய்வார்கள். இந்த மாதத்தில் அசைவ உணவுகளை உண்பதில்லை. நமது முன்னோர்கள் அறிவியல் பூர்வமான காரணத்துக்காகவே ஆன்மிக கருத்துக்களை வலியுறுத்தியுள்ளனர்.
ஆன்மீக ரீதியாக நல்லது:
ஜோதிட சாஸ்திரத்தில் 6வது ராசியான கன்னி ராசிக்குரிய மாதம் புரட்டாசி. அதற்கு அதிபதி புதன். புதன் பகவான் சைவத்திற்குரிய கிரகம் என்பதால், புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், விரதம் இருந்து பெருமாள் வழிபாடு செய்வது சிறந்தது.
அறிவியல் பூர்வமான உண்மை:
புரட்டாசி மாதத்தில் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும். இதனால், காற்று குறைந்து மழை ஆரம்பிக்கும் நேரம். இதுநாள் வரை சூடாகி இருந்த பூமி இப்பொழுது, தன்னுள் இருக்கும் சூட்டை மழை பெய்ய வெளியேற்றி கொண்டு உஷ்ணத்தை கிளப்பிவிடும்.
இது அக்னி நட்சத்திர வெயில் காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான பருவத்தில் நிலவும் வெப்பத்தை காட்டிலும் கொடியது. எனவே, இந்த சமயத்தில் அசைவ உணவுகளை சாப்பிட்டால் மேலும் கூடுதல் சூட்டை கிளப்பி வயிறு சம்பந்தமான உபாதைகளை ஏற்படுத்தி, நம்முடைய உடல் நலத்தை கெடுக்கும்.
ஆம், புரட்டாசி மாதத்தில் சூரியனின் வெளிச்சம் குறைந்து காணப்படும். இதன் காரணமாக, பூமியின் சுழற்சி இயக்கத்தின் படி நமக்கு செரிமானக் குறைவும், வயிற்று உபாதைகளும் ஏற்பட்டு நம் உடம்பில் கெட்ட கொழுப்புகள் தங்கி விடும். இதனால் உடல் உபாதைகள் ஏற்படலாம் என்பதை தவிர்ப்பதற்காகவே நமது முன்னோர்கள் இப்படி ஒரு காரணத்தை கூறி வைத்துள்ளனர்.
புரட்டாசி சனிக்கிழமை
திருவள்ளூர் அருகே புரட்டாசி மாத 4,வது சனிக்கிழமையை யொட்டி ஸ்ரீ எம்பெருமான் திருக்கோவிலில்,வெகு விமரிசையான முறையில் திருவிழா நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், புல்லரம்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதியில் ஸ்ரீ எம்பெருமான் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கிராம மக்கள் சார்பில் புரட்டாசி மாதம் நான்காம் வாரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் கடந்த12.ஆம் தேதி பந்தக்கால் நிகழ்வு மற்றும் வெள்ளி இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு ஸ்ரீ எம்பெருமான் உற்சவருக்கு பால்,தயிர், சந்தனம், ஜவ்வாது, தேன், பன்னீர்,இளநீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து எம்பெருமானுக்கு பிடித்த நைவேத்தியமான தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மற்றும் பழங்களை வைத்து தீப, தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து பெருமாள் திருவீதி விழா செல்லும் வாகனத்தில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக மேள, தாளங்கள் முழங்க வாணவேடிக்கை உடன் ஊர்வலமாக சென்றபோது பொதுமக்கள் தேங்காய் பழம் என எம்பெருமானுக்கு படைத்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன், மற்றும் முனிரத்தினம், சிவராஜ், ஸ்ரீதர்,சிவசங்கர், ராஜன். மற்றும் ஊர் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது மிகச் சிறப்பான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu