நோன்பில் இருந்த கைதிகளுக்கு உணவு வழங்கவில்லை என கைதிகள் போராட்டம்!

நோன்பில் இருந்த கைதிகளுக்கு உணவு வழங்கவில்லை என கைதிகள் போராட்டம்!
X
புழல் சிறையில் ரம்சான் நோன்பிலிருந்த கைதிகளுக்கு உணவு வழங்கவில்லை எனக்கூறி கைதிகள் போராட்டம்.

புழல் சிறையில் ரம்சான் நோன்பிருந்த கைதிகளுக்கு முறையாக உணவு வழங்கவில்லை என கூறி சிறை காவலர்களை கண்டித்து கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

திருவள்ளூர் மாவட்டம், சென்னை புழல் சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3பிரிவுகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை கைதிகள் பிரிவில் வெள்ளிக்கிழமை இஸ்லாமிய கைதிகள் ரம்சான் நோன்பிருந்தனர். மாலையில் நோன்பு திறக்கும் நேரத்தில் சிறை காவலர்கள் உணவை தாமதமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து கைதிகள் ஆத்திரமடைந்து சிறை காவலர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சிறை அதிகாரிகள் கைதிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் காரணமாக புழல் சிறை வளாகத்தில் கைதிகள் மத்தியில் பரபரப்பு நிலவியது. இதனிடையே தமது கணவர் முகமது ரிப்பாஸை சிறை காவலர்கள் கண்ணன், சதீஷ், முரளி ஷூ காலால் தாக்கியதில் காயமடைந்ததாகவும், தமது கணவருக்கு உரிய சிகிச்சை அளித்திடவும், சிறை காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!