செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு : மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு : மாவட்ட ஆட்சியரிடம் மனு..!
X

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

தண்ணீர் குளம் பகுதியில் புதிதாக செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

5.ஜி செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட தண்ணீர் குளம் கிராமத்தில் சுமார் 3,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் 5.ஜி சேவைக்கான செல்போன் கோபுரம் அமைப்பதற்கான அஸ்திவாரப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பு பகுதிகளில் 5.g சேவைக்கான செல்போன் கோபுரம் அமைத்தால் கதிர்வீச்சு காரணமாக குழந்தைகள், முதியவர்கள்,கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படும் எனவே குடியிருப்பு பகுதியில் 5.ஜி சேவைக்கான செல்போன் கோபுரம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்யிடம் புகார் மனு அளித்தனர்‌.

அந்த மனுவில் பொதுமக்கள் தெரிவித்திருப்பதாவது :-

மாவட்ட நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் அமைய உள்ள 5g சேவைக்கான செல் போன் கோபுரத்தை அமைக்கும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், இது இப்பகுதி மக்களுக்கு உடல்நலப் பிரச்னைகளை கொண்டுவரும் எனவும் அப்பகுதி பொதுமக்கள்‌ அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!