திருவள்ளூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் கைது!

திருவள்ளூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் கைது!
X
திருவள்ளூர் அருகே உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் தனியார் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கொடுத்த புகார் கண்டுகொள்ளாமல் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்த சம்பவம் பரபரப்பு.

உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் தனியார் தொழிற்சாலை எச் ஆர் மீது கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல்

தொழிற்சாலை நிர்வாகம் கொடுத்த பொய்யான புகாரில் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், உளுந்தை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் எம்.கே.ரமேஷ். இந்த உளுந்தை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எக்விடாஸ் என்ற தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை தொழிற்சாலைக்கான அனுமதியோ கட்டிடம் கட்டுவதற்கான உரிமமோ பெறாமல் தொழிற்சாலைக்கான வரியை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவரான எம்.கே.ரமேஷ் பொறுப்பேற்ற நாள் முதல் கடந்த நான்காண்டுகளாக வரியை செலுத்த கோரியும், கட்டிட வரைபட அனுமதி பெற வேண்டும் என பலமுறை தொழிற்சாலை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந் நிலையில் கடந்த 25.1. 2024 அன்று தொழிற்சாலை எச் ஆர் மேனேஜர் சின்ன முனியாண்டி என்பவர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து தலைவர் எம் கே ரமேஷிடம் பேசியுள்ளார். அப்போது தொழிற்சாலைக்கான வரி, கட்டிடம் கட்டுவதற்கான உரிமம் மற்றும் தொழிற்சாலை கட்டுவதற்கான உரிமம் ஆகியவற்றை பெற வேண்டும் என தலைவர் எம் கே ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.


இந் நிலையில் கட்டிட வரைபட அனுமதி மற்றும் தொழிற்சாலை உரிமம் வாங்க மாட்டோம் என்று சொன்னதுடன் தலைவர் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தொழிற்சாலை எச் ஆர் மேனேஜர் சின்ன முனியாண்டி என்பவர். இதுகுறித்து 25 1 20 24 சம்பவம் நடைபெற்ற தினத்தன்று மப்பேடு போலீசில் ஊராட்சி மன்ற தலைவர் எம் கே ரமேஷ் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சம்பிரதாயத்திற்காக விசாரிக்கவும் செய்யாமல் இன்று திடீரென தொழிற்சாலை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் ஏ எஸ் பி விவேகானந்தா சுக்லா தலைமையிலான போலீசார் காலை அளவில் வீட்டில் இருந்த ஊராட்சி மன்ற தலைவர் எம்கே ரமேஷை வலுக்கட்டாயமாக கைது செய்து தனியிடத்தில் வைத்து விசாரித்துள்ளனர்.

இதனிடையே 12 மணி நேர விசாரணைக்கு பிறகுஇரவு பத்து மணி அளவில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்பரிசோ தனைக்காக போலீசார் அழைத்து வந்தபோது ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் இதனை சிறிதும் கண்டுகொள்ளாத காவல்துறையினர் மாவட்ட குற்றவியல் நடுவர் எண் 2-ல் நீதிபதி ராதிகா முன்னிலையில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து புழல் மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார். இதனால் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!