உண்ணாவிரத போராட்டத்தில் பசி தாங்க முடியாமல் மறைவில் சென்று பிரியாணி வெளுத்து கட்டிய உரிமையாளர்கள், ஓட்டுநர்கள்!
மூன்று மணி நேரம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரியாணியை வெளுத்து கட்டிய. திருவள்ளூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள். உண்ணாவிருதம் ஆரம்பிக்கும்போது நிரம்பி இருந்த இருக்கைகள். ஒரு மணி அளவில் வெறிச்சோடி காணப்பட்டதால் காவல்துறையினர் பொதுமக்கள் அதிர்ச்சி.
மத்திய அரசின் ஹிட் அண்டு ரன் புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் மண்வாரிகளை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டமானது நடைபெற்றது.
இந்த போராட்டம் ஆனது காலை 10 மணி அளவில் தொடங்கிய நிலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர் இந்நிலையில் 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டமானது நடைபெற்று வருகிறது ஆரம்பிக்கும்போது 200க்கும் மேற்பட்ட அவர்கள் கலந்து கொண்ட நிலையில் மதிய உணவு வேலையில் 200க்கும் மேற்பட்டோர் பந்தலுக்கு பின்புறம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி செல்லும் சாலையின் ஓரங்களில் குழு குழுவாக அமர்ந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் பிரியாணி சாப்பிட்ட சம்பவம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் சர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது.
உண்ணாவிரதப் போராட்டம் என கலந்து கொண்டு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மதியம் ஒரு மணி வரை கூட பசி தாங்காமல் பிரியாணி சாப்பிட்ட சம்பவம் அனைவருடத்திலும் சர்ச்சையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu