புழலில் தொடரும் ஆன்லைன் மோசடிகள்..!

புழலில் தொடரும் ஆன்லைன் மோசடிகள்..!
X

ஆன்லைன் மோசடி (கோப்பு படம்)

புழலில் மீண்டும் ஆன்லைன் மோசடியில் 3 பேரிடம் 1.6 லட்சம் பறிப்பு. போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

புழலில் ஆன்லைன் மோசடி தொடர்ந்து வருகிறது. மூவரிடம் 1.6 லட்சம் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் . 2பிரிவுகளில் 3வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து மோசடி பேர்வழிகளை தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழலில் ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் புதுப்புது வடிவங்களில் அரங்கேறி வருவதால் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

புழல் அடுத்த லட்சுமிபுரத்தை சேர்ந்த சபரி (36) என்பவர் தனியார் டிஜிட்டல் க்ரெடிட் வால்ட் பயன்படுத்தி வருகிறார். ரூபாய் 20000கடன் தொகை பெற கூடிய டிஜிட்டல் வாலட்டை சபரி பயன்படுத்தி வந்துள்ளார். அண்மையில் இவருக்கு வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக வந்த அழைப்பில் டிஜிட்டல் வாலட் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றால் RUST DESK என்ற செயலியை டவுன்லோட் செய்யுமாறு கூறியுள்ளார். சபரி மறுக்கவே, அண்மையில் அவர் மேற்கொண்ட பரிவர்த்தனை விவரங்களை மர்ம நபர் சரியாக கூறி உங்களது வாலட் கணக்கு முடக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.

சபரி RUST DESK என்ற செயலியை டவுன்லோட் செய்துள்ளார். அடுத்த சில நொடிகளிலேயே சபரியின் டிஜிட்டல் வாலட் கணக்கில் இருந்து 19896 ரூபாய் பணம் திருடப்பட்டது. இதுகுறித்து சபரி உடனடியாக புகார் அளித்தார். புழல் அடுத்த லட்சுமிபுரத்தை சேர்ந்த காவ்யா (24) என்பவரது இன்ஸ்டாக்ராமிற்கு ஒரு லிங்க் வந்துள்ளது. இதனை அழுத்தியவுடன் மூன்று Task கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ரூ.1000 அனுப்பினால் ரூ.1300 வரும் என்று கூறியதன் பேரில் ரூ.1000 அனுப்பிதும், ரூ.1300 வந்துள்ளது. ரூ.10000 அனுப்பினால் ரூ.16900 வரும் என்று கூறியதால் ரூ.10000அனுப்பிய பின்னர் ரூ.35000அனுப்ப வேண்டும் என்றதால் ரூ.35000 மீண்டும் அனுப்பினார். தொடர்ந்து ரூ.51000 அனுப்பினால் மட்டுமே முழு தொகை கிடைக்கும் என கூறியதால் மேலும் ரூ.51,000 அனுப்பியுள்ளார்.

மேற்கொண்டு ரூ.1,20,000 அனுப்ப வேண்டும் என்றதால் அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புகார் அளித்துள்ளார். புழல் அடுத்த டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த காயத்ரி (31) செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. HDFC வங்கி வெகுமதி புள்ளிகள் வந்துள்ளதாகவும், 5899ரூபாய் இன்றே முடிவடைய உள்ளதாகவும், இணைப்பை அழுந்துமாறு கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து காயத்ரி இணைப்பை அழுத்தியதும் HDFC நெட்பேங்கிங் உள்ளே சென்றுள்ளது. தமது USERNAME, PASSWORD, OTPஐ அதில் பதிவிட்டதும் வங்கி கணக்கில் இருந்து 39114ரூபாய் பணம் உடனடியாக எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காயத்ரி புகார் அளித்தார். இந்த புகார்களின் பேரில் ஐபிசி 420, 2008ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66டி என இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசடி மற்றும் இணைய வழி குற்றம் என்பதால் குற்றப்பிரிவு மற்றும் சைபர் பிரிவு என அனைத்து பிரிவு போலீசாரும் மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் சுற்றுவட்டார இடங்களில் தொடர்ந்து நடைபெறும் ஆன்லைன் மோசடி குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

Tags

Next Story