ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல்..!

ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல்..!
X

அரசு மருத்துவமனை அருகே  நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களை சோதனை இட்ட போக்குவரத்து அதிகாரி.

திருவள்ளூரில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்டு வரும் ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர.

திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டு வந்த ஆறு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம், சீருடை இல்லாத வாகனங்கள் என மொத்தம் 15 ஆட்டோக்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அரசு மருத்துவமனை அருகே சாலையில் ஆட்டோ ஸ்டாண்ட் ஆக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் சுமார் 20000.க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் செயல்பட்டு வருகின்றது. இதனால் ஒரு சில ஆட்டோக்கள் உரிய ஆவணங்கள் இன்றியும் ஓட்டுநர்கள் முறையாக ஓட்டுனர் உரிமம் மற்றும் சீருடை இல்லாமலும் இயக்கி வருகின்றனர். இன்னும் சில ஆட்டோக்களில் நம்பர் பிளேட் இல்லாமலும் இயக்கப்படுவதாகவும் திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகே சாலை ஓரங்களில் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆட்டோக்களை நிறுத்தி பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனை கேட்கும் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிடுவதாகவும் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கும் திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மோகனுக்கும் புகார்கள் வந்தன.

திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோக்களையும் திடீர் சோதனை செய்ததில் ஆட்டோக்களுக்கு உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டு வந்த 6 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஆட்டோக்களில் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர்கள் முறையான சீருடை அணியாமல் வாகனங்களில் நம்பர் இல்லாமலும் இயக்கப்பட்டு வந்த 10 ஆட்டோக்களுக்கு தலா 1500 ரூபாய் அபராதமாக முதல் கட்டமாக விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆறு ஆட்டோக்களுக்கு தலா 15,000 என 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் 16 ஆட்டோ களுக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகே சாலை ஓரத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் ஆக பயன்படுத்தி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்தால் ஆட்டோக்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து அதிகாரியால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகே தொடர்ந்து சோதனைகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை உரிய ஆவணம் இல்லாமல் இயக்கம் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. டஙக ருவள்ளூரில்

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil