புதிய தார் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா..!

புதிய தார் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு  விழா..!
X

புதிய தார்ச்சாலை அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொண்ட சிறப்பு அழைப்பாளர்கள்.

நந்திமங்கலம் ஊராட்சியில் புதிய தார் சாலை அமைப்பதற்கான அடிக்கல்லை ஒன்றிய செயலாளர் ரமேஷ் ராஜ் நாட்டினார்.

பொன்னேரி அருகே மீஞ்சூர் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் 77.லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை. எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் அடிக்கல் நாட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய நந்தியம்பாக்கம் ஊராட்சி ஆதிலட்சுமி நகர் முதல், ராஜீவ்காந்தி நகர் வரை புதியதார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன் தலைமை வகித்தார் ,

இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த புதியசாலை அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிதியிலிருந்து ரூ.77லட்சம் மதிப்பீட்டில் ஆதிலட்சுமி நகரிலிருந்து ராஜீவ் காந்தி நகர் இணைப்பு வரை புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார்.அவருடன் முன்னாள் மாவட்ட பிரதிநிதி வல்லூர் பா.து. தமிழரசன்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கலாவதி,வார்டு உறுப்பினர்கள் காதர் பாட்ஷா,வில்வநாதன், திமுக நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி மீஞ்சூர் மணிமாறன்,ராஜா,கலைமணி, ஸ்டாலின், கலாநிதி, ராமதாஸ், சுரேந்தர், காட்டுப்பள்ளி ராஜி,கொண்டக்கரை கலைவாணன்,மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

நீண்ட நாள் கோரிக்கையான புதிய தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த தமிழக அரசுக்கும் இதனை துவக்கி வைத்த ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ்க்கும் ஊராட்சி பிரதிநிதிகளுக்கும் தாங்கள் நெஞ்சார்ந்த நன்றியை இப்பகுத்தி பொதுமக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story