புத்தக கண்காட்சியைத் திறந்து வைத்த அமைச்சர் காந்தி!
மூன்றாவது புத்தகத் திருவிழாவினை அமைச்சர் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி அவர்கள் துவக்கி வைத்து புத்தக அரங்கினை பார்வையிட்டார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இன்று அமைச்சர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அவர்கள் மூன்றாவது புத்தக திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபுசங்கர் அவர்கள் தலைமையில் திருவள்ளுவர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன், பூவிருந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து புத்தகங்களை பார்வையிட்டார்கள்.
தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க சிறப்பாக மிகப்பிரமாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மூன்றாவது புத்தகத் திருவிழா பார்க்கும்பொழுது நான் வியந்து போய்விட்டேன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற முதல் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள், 10 நாட்கள் நடைபெறுகின்ற இந்த புத்தகத் திருவிழா அனைத்து துறை அலுவலர்களும் சிறப்பாக செயல்பட்டது தான் இந்த பிரம்மாண்டமான மூன்றாவது புத்தகத் திருவிழா அமைந்துள்ளது என்பதை நான் அறிவேன், அதேபோல் நாம் எந்த ஒரு திட்டங்கள் ஆனாலும் ஒற்றுமையாக இருந்த செயல்பட்டால் தான் சிறப்பாக அமையும் 2019 டாக்டர் கலைஞர் அவர்கள் சென்னையில் அண்ணா நூலகம் துவக்கி வைத்தார்கள் அவர்கள் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மதுரையில் 2023 ஆம் ஆண்டு மிகப் பிரம்மாண்டமான கலைஞர் நூலகத்தினை திறந்து வைத்துள்ளார்.
அந்த அளவிற்கு நூலகத்தின் மீது பற்றுள்ளவர் நம் முதல்வர் அவர்கள்தான் ஏனென்றால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். புத்தகங்கள் வாசிப்பது ஒரு அற்புத கலை அந்த கலைவினை குழந்தைகள் பள்ளிப் பருவத்தில் இருந்து புத்தகங்கள் வாசிப்பது பழகிக்கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் குழந்தைகளுக்கு கற்பனை வளம் சிந்திக்கின்ற திறமை போன்ற பழக்க வழக்கங்கள் உருவாக தூண்டும், கல்வி ஒன்று தான் உங்கள் வாழ்நாளில் அழியாத செல்வம் ஆகியால் பள்ளி பருவங்களில் நல்ல நூல்களை வாங்கி நூல்களை வாசியுங்கள்.
மேலும் 10 நாட்கள் நடைபெறுகின்ற புத்தகத் திருவிழாவினை மாணவச் செல்வங்கள் நல்ல முறையில் பயன்படுத்தி புத்தகங்கள் உள்ள நல்ல நூல்களை வாங்கி வாழ்வில் முன்னேறி அறிவார்ந்த திருவள்ளூர் மாவட்டமாக உருவாக்குங்கள் என மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் கவிதா, பப்ளிகேஷன் சேது சொக்கலிங்கம், செயலாளர் முருகன், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu