ரயில் நிலைய நடமேடையில் தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

ரயில் நிலைய நடமேடையில் தவறி விழுந்த நபர் உயிரிழப்பு
X

சிறப்பு ரயில் - கோப்புப்படம் 

திருவள்ளூர் அருகே ரயில் நிற்பதற்கு முன்பு இறங்க முயன்ற நபர் நடைமேடையில் விழுந்து தலை உடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் பரபரப்பு.

திருவள்ளூர் அடுத்த புட்லூர் நடைமேடையில் வண்டி நிற்பதற்கு முன்பாக இறங்கிய நபர் தலையில் பலத்த காயமடைந்து இறந்தார்

திருவள்ளூர் அடுத்த புட்லூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் நடைமேடையில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ட நாகேஸ்வர். இவர் திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி மின்சார ரயிலில் பயணித்து வந்துள்ளார்.

அப்போது திருவள்ளுர் அடுத்த புட்லூர் ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் வந்த போது ரயில் நிற்பதற்கு முன்பாக ஓடும் ரயிலில் இறங்க முயன்ற அவர் நடைமேடையில் தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்ப இடத்திலே உயிரிழந்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்ட வருகின்றன. புட்லூர் நடை மேடையில் நடந்த இந்த இந்த சம்பவத்தால் புட்லூர் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!