கந்த சஷ்டி விழாவில் முருகனுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி!

கந்த சஷ்டி விழாவில் முருகனுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி!
X
சிறுவாபுரி முருகன் கோவில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகனுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

சிறுவாபுரி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் ஒரு பகுதியாக முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி. திரளான பக்தர்கள் பங்கேற்பு. சூரசம்ஹார நிகழ்ச்சியில் சூரனை கொல்ல பயன்படும் வேலை தனது தாயாரிடம் இருந்து முருகன் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு சிறுவாபுரி கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

சிறுவாபுரி முருகன் கோயிலில் தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமை நாட்களில் கோவிலுக்கு வந்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினால் கோரிக்கை நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கப்பட்டது. கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளான நேற்று மாலை உண்ணாமலை அம்பாளிடம் (பார்வதி) சண்முகர் வேலனுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.


சனிக்கிழமை சூரசம்ஹார நிகழ்வில் சூரனை வதம் செய்வதற்காக தமது மகனுக்கு தாயார் வேல் வழங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக மேள தாளங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது. பின்னர் கூடி இருந்த திரளான பக்தர்கள் கோஷத்தில் அரோகரா கோஷங்கள் எழுப்பினர். வேலை பெற்றுக்கொண்ட சண்முகர் கோயில் வளாகத்தில் மூன்று முறை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்னைக்கு இருக்கான ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் செந்தில் குமார் தலைமையில், தலைமை குருக்கள் ஆனந்தன், மற்றும் ஆலய ஊழியர்கள் பணியாளர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!