திருவள்ளூர் அருகே இலவச கண் சிகிச்சை முகாம்!

திருவள்ளூர் அருகே இலவச கண் சிகிச்சை முகாம்!
X
திருவள்ளூர் அருகே கைவண்டுர் கிராமத்தில் கருணாநிதியின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் அருகே டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளையொட்டிமாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாளை ஒட்டி திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கைவண்டுர் ஊராட்சியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கைவண்டூர் டேவிட் பூங்கொடி 5,வது வார்டு உறுப்பினர் தலைமைலும் மற்றும் பூந்தமல்லி சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் எக்விடாஸ் வங்கி மற்றும் மகிழ்ச்சி அறக்கட்டளை சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதில் பூந்தமல்லி சவிதா கண்மருத்துவமனையில் இருந்து10க்கு மேற்பட்ட மருத்துவா்கள் 15 க்கு மேற்பட்ட செவிலியர்கள் குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு ரத்தஅழுத்தம்,சா்க்கரை நோய் மற்றும் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டு மாத்திரை மருந்துகள் வழங்கி ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்த முகாமில் சுமார் 500.பேருக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி கிளப் தலைவர் ராஜா ரவி. ரோட்டரி ஸ்பார்ட்டன் கிளப்முன்னாள் தலைவர் வழக்கறிஞர் கரண்ட் கார்த்திக், ரோட்டரி ஸ்பார்ட்டன் வருங்கால தலைவர் வழக்கறிஞர் பரணி, DMSST அறக்கட்டளை நிறுவனர் லயன் டாக்டர் சந்தியா,

சங்கப் பணி இளங்கோ,மற்றும் திமுக பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!