வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள் உபகரணங்கள்!

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள் உபகரணங்கள்!
X
திருவள்ளூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மீட்பு உபகரணங்கள் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 தீயணைப்பு நிலையங்களில் 10 தீயணைப்பு வாகனங்கள்.6 படகுகள் மற்றும் மழைக்கால மீட்பு உபகரணங்கள் உடன் 100 தீயணைப்பு வீரர்கள் வடகிழக்கு பருவ மழை முன்னேச்சரிக்கை பணிக்காக தயார் நிலை.

வடகிழக்கு பருவமழை எதிர் கொள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 தீயணைப்பு நிலையங்களில் 100 தீயணைப்பு வீரர்கள், 50 தன்னார்வலர்கள் 10 தீயணைப்பு வாகனங்கள், 6 படகுகள் மற்றும் மழைக்கால மீட்பு உபகரணங்கள் முன்னெச்சரிக்கை பணிக்காக தயார் நிலையில் உள்ளனர்.

இதில் திருவள்ளூர் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் வில்சன் ராஜ் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் ஞானவேல் நிலைய போக்குவரத்து அலுவலர் அழகர்சாமி மற்றும் தீயணைப்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்

இதில் பருவமழை காலங்களில் பொதுமக்களை காப்பாற்றவும், வெள்ளத்தில் சிக்கிய வர்களை மீட்க ரப்பர் படகு, உயர் கோபுர விளக்கு, மிதவை மற்றும் உடை, விபத்து ஏற்படும் பொழுது இரும்பு மரம் உள்ளிட்ட பொருட்களை வெட்டுவதற்கான நவீன இயந்திரம், மிதவை பம்பு. வாகனங்களின் அடியில் சிக்கியர்வளை மீட்க உதவும் பொருட்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.மேலும் ஆபத்துக் காலங்களில் 101,112 என்ற இலவச எண்ணிற்கு வரும் அழைப்புகளை கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story