மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா..!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் சமத்துவ பொங்கல் விழாவில் போட்ட குத்தாட்டத்தைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அசந்து போனார்கள்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அலுவலக பெண் ஊழியர்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் குத்தாட்டம் போட்டு பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினார் .
தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் ஒவ்வொரு துறையை சேர்ந்த அலுவலக பெண் ஊழியர்கள் இளைஞர்கள் நான்கு பேர் ஒரு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சேலை புத்தாடை அணிந்து பொங்கல் வைத்தும் விதவிதமான வண்ண கோலமிட்டு அசத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகள் மேளதாளங்களுடன் நடைபெற்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விழாக்கோலமாக மாறியது.
மேளத்தால இசைகளுக்கு இணங்க மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பெண் அலுவலர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்டு நடனம் ஆடினார். இது மக்கள் மத்தியில் புதிய உற்ச்சாகத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினார்.
பின்னர் அலுவலக ஊழியர்களுடன் இணைந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்று உறியடித்து கலக்கினார். அதைத்தொடர்ந்து பெண் அலுவலர்கள்போடப்பட்ட வண்ணக் கோலங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டர்.
விளையாட்டுப்போட்டிகள் மற்றும் கோலப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தண்ணீர் குவளைகளை பரிசு பொருட்களாக வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu