புரட்சி பாரதம் கட்சித்தலைவரை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து சமாதானம்..!

புரட்சி பாரதம் கட்சித்தலைவரை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து சமாதானம்..!
X
மாவட்ட ஆட்சியரை சந்திக்க குறித்த நேரத்தில் அனுமதி தவறியதால், ஆட்சியரை சந்திக்காமல் திரும்பிய புரட்சி பாரதம் கட்சி ஜெகன் மூர்த்தியை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து சமாதானம் செய்து அழைத்துச் சென்றார்.

ஆட்சியரை சந்திக்க கால தாமதம் ஏற்பட்டதால் அலுவலகத்தை விட்டு வெளியேறிய புரட்சி பாரதம் கட்சியின் தலைவரை மாவட்ட ஆட்சியர் கீழே இறங்கி வந்து அழைத்து சமாதானம் செய்த சம்பவம் காண்பவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அவரை சந்திக்க மாவட்ட ஆட்சியர் மாலை 6:00 மணி அளவில் நேரம் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் இரவு ஏழு பதினைந்து மணி வரை மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியவில்லை இதனால் அதிருப்தி அடைந்த புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியாது எனக்கூறி அவர் அறையில் முன்பு இருந்து வேகமாக கீழே இறங்கி வந்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வேகமாக கீழே இறங்கி வந்தார்.

பின்னர் அவர் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியிடம் தன்னுடைய அலுவல் பணி மற்றும் மீட்டிங் தொடர்பாக இருந்ததாகவும், அதனால் தங்களை சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நீங்கள் முக்கியம் என்று கருதியதால் தான் இது போல் இறங்கி வந்து அழைத்துச் செல்கிறேன். தாமதத்துக்கு வருந்துகிறேன் எனக்கூறி அவரை அழைத்துச் சென்றார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு இறங்கி வந்து அவரை அழைத்துச் சென்ற சம்பவம் அந்த நிகழ்ச்சியை கண்டவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!