திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
X
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து பெரியபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக அரசை கண்டித்து பெரியபாளையத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றாத ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய பாஜக நிர்வாகி, தேசிய மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்த பெண்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளம் பாக்கி உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும், மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் எனவும், விலைவாசி உயர்வு கட்டுப்படுத்திட வேண்டும் எனவும் கூறினார். தேர்தல் நேரத்தில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத திமுக அரசுக்கு எதிராக இன்னும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் பொறுப்பாளருமான ஜெ. ரவி தலைமை வகித்தார். மாநில அரசு பிரிவு தலைவர் பாஸ்கரன், முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் டால்பின் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாநில மகளிர் அணியைச் சார்ந்த மாலினி ஜெயச்சந்திரன், ஓ.பி.சி. அணியின் மாவட்டத் தலைவர் சுப்பிரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.பிரபாகரன், ஆனந்தன், வெளிநாடு தமிழர் நல பிரிவு தலைவர் சுரேஷ், மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் புலித்துறை, முன்னதாக அனைவரையும் மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் டி.எல்.பி. நாயுடு வரவேற்றார். முடிவில் எல்லாபுரம் மேற்கு, மற்றும் கிழக்கு ஒன்றிய அமைப்பாளர்கள் ஜெய் பிரகாஷ், சுதாகர் ஆகியோர் நன்றி கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!