கொரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கிவைத்த பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பாலயோகி

கொரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கிவைத்த பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பாலயோகி
X

திருவள்ளூர் மணவாள நகரில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பா.ம.க மாநில துணைப் பொதுச் செலாளார் பாலயோகி தொடங்கிவைத்தார்.

மணவாளநகரில் கொரோனா தடுப்பூசி முகாமை பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் பாலயோகி தொடங்கிவைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில தினங்களாகவே குறைந்து வரும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் பொருட்டு பல்வேறு கட்டமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் பாலயோகி அவர்களின் தலைமையில் மணவாள நகரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

இதில் கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலரும் பாமக மாநில அமைப்புச் செயலாளருமான வெங்கடேசன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கவுன்சிலர் தினேஷ்குமார் கலந்துகொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர்.

Tags

Next Story
ai in future agriculture