ஊத்துக்கோட்டையில் தமிழக அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்..!

ஊத்துக்கோட்டையில் தமிழக அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்..!
X

ஊத்துக்கோட்டையில் (சிபிஐ எம்எல்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து ஊத்துக்கோட்டையில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊத்துக்கோட்டையில் (சிபிஐ எம்எல்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமற்றும் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை சார்பில் சூர்யா, சுந்தர், தலைமையில எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில்

புதுக்கோட்டை வட்டம், வேங்கைவையில் கிராமத்தில் குடிநீர் மேல் தொட்டியில் மனித கழிவுகளை கலந்து தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை இதுவரை கைது செய்வதில் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவதாகவும், மேலும்தாக்குதல் தடுக்க தவறிய காவல்துறை,வருவாய் துறை, உள்ளிட்ட அரசுத்துறை சார்ந்த அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தலித் மக்கள் மீதான படுகொலை அடுக்கு முறை, ஒடுக்குமுறை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஊத்துக்கோட்டை அருகே உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் வீட்டு பட்டா இல்லாமல் பல ஆண்டுகளாக அப்பகுதில் பொதுமக்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கு வீட்டுமனை பட்டாவை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில்மாவட்ட செயலாளர் தோழர் அன்பு, மற்றும்(சிபிஐ.எம்எல்) சுந்தர். மதி, நந்தகுமார் மாரியப்பன், சங்கர், ராமன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!