கண்ணீர் துடைக்கும் தென்னை..! தென்னைக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி..!
தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி.
பெரியபாளையம் அருகே பாகல்மேடு-செம்பேடு ஊராட்சியைச் சேர்ந்த ஆயிரம் குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
டி.வி.எஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் மற்றும் விருட்சம் பவுண்டேஷன் இணைந்து ''கிராமப்புற வாழ்வாதார விவசாயிகள் மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சியாக'' இந்த தென்னை மரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பாகல்மேடு மற்றும் செம்பேடு ஆகிய இரண்டு ஊராட்சியைச் சேர்ந்த ஆயிரம் குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி பாகல்மேடு, செம்பேடு ஆகிய ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,பாகல்மேடு ஊராட்சி மன்ற தலைவர் தேவகி தங்க பிரகாசம், செம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.டி.வி.எஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிறுவன அதிகாரிகள் ரஜினி,சங்கர், தங்கராஜ்,ஜெகதீசன்,ரேவதி, விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சமூக சேவகர் பாகல்மேடு கண்ணன்,திவ்யா, பேரிட்டிவாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் வக்கீல் தில்லைகுமார்,அரசு வழக்கறிஞர் கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில்,ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் தியாகராஜன் கலந்து கொண்டு தென்னங்கன்றை பேணி பாதுகாத்தால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், விவசாயிகளின் வாழ்க்கை மேம்படவும் உதவுவதாகவும், நம் குழந்தையை எப்படி நாம் காப்பாற்றுவோமோ அது போல் பாதுகாக்க வேண்டும் என்று பேசினார்.
இதன் பின்னர்,ஒரு குடும்பத்துக்கு இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் ஆயிரம் குடும்பங்களுக்கு 2,000 தென்னங்கன்றுகளை வழங்கினர்.முன்னதாக அனைவரையும் ஊராட்சிமன்ற துணைத்தலைவர்கள் சரளாஆதிகேசவன், திருவேங்கடம் ஆகியோர் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களும் கலந்து கொண்டனர்.
முடிவில்,மக்கள் நலப் பணியாளர் ராஜேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரஞ்சித்,பேரிட்டிவாக்கம் ஊராட்சி செயலர் தனசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu