திருவள்ளூர் அருகே சதுரங்க திருவிழா..!
திருவள்ளூரில் நடந்த சதுரங்கப்போட்டி
திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் வெள்ளி விழாவை முன்னிட்டு அரண்வாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் சதுரங்க சங்கம் தொடங்கி 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கிராமப்புற மாணவர்களை சதுரங்கப் போட்டியில் ஊக்கப்படுத்தும் வகையில் திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியானது இரண்டு நாட்கள் நடைபெற்றது. அதில் 1500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் சதுரங்கப் போட்டிக்கான நிலம் ஒதுக்கிய இடத்தில் அரசு விரைவில் உள்ளரங்கம் கட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும்,
மாணவர்களின் அறிவுத்திறனை அதிகரிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி நேரத்தில் சதுரங்க போட்டியும் சேர்க்க வேண்டுமெனவும் திருவள்ளூர் மாவட்ட சதுரங்கப் போட்டி சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சதுரங்கம் போட்டி சங்கத்தின் தலைவர் பலராமன், பிரதியுஷா பொறியல் கல்லூரியின் முதல்வர் ரமேஷ் பாபு ஏ மேக்ஸ் சதுரங்க சங்கத்தின் தலைவர் சுஜய் சக்ரவர்த்தி கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு அழைப்பாளராக உலக சதுரங்கப் போட்டி வீரர் கார்த்திகேயன் முரளி பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
தமிழகத்தில் இருந்து உலக அளவில் சிறந்த சதுரங்க வீரர்களாக திகழும் விஸ்வநாதன் மற்றும் பிரக்ஞானந்தா போன்றவர்கள் வழியில் இன்னும் சதுரங்க வீரர்கள் உருவாக இதைப்போன்ற சதுரங்கப் போட்டிகளை முன்னெடுக்கவேண்டும். திறமையானவர்கள் வெளி உலகுக்கு அறிமுகம் ஆகவேண்டும் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu