பாஜக சார்பில் போதை பொருள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!
திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பிரதமருக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு தர முடியவில்லை என்றால் ஆட்சியை கலைத்து விடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக தேசிய சிறுபான்மையினர் செயலாளர் வேலூர் இப்ராஹிம் கேள்வி.
தமிழ்நாட்டில் தலை விரித்தாடும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசுக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய சிறுபான்மையினர் செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர் வரும் 18ம் தேதி கோவைக்கு வரும் பிரதமர் மோடிக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு தர இயலாது என்று தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது. பிரதமருக்கே பாதுகாப்பு தர முடியவில்லை என்றால் ஆட்சியை கலைத்து விடுங்கள் என முதலமைச்சர மு.க.ஸ்டாலினுக்கு கேள்வியை எழுப்பிய அவர், தமிழ்நாடு காவல்துறைக்கு இது ஒரு தலைகுனிவு என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவல்துறையினர் கைகள் கட்டப்பட்டு ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து, குண்டு வெடிப்பு, போன்ற ஆபத்தான சூழ்நிலை நிலவுகிறது என்று விமர்சித்தார். மேலும் திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமாருக்கு அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் கூட வித்தியாசம் தெரியாத முட்டாளாக உள்ளார்,
வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்தவர்களை சமூக நீதி பேசும் திமுக அரசு இதுவரை கைது செய்யவில்லை இன்று குற்றம் சாட்டிய அவர் தன்னை பட்டியலின தலைவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் திருமாவளவன் இந்த சம்பவம் குறித்து இதனால் வரை வாய் திறக்கவில்லை.
இரண்டு சீட்டுக்காக ஒட்டுமொத்த பட்டியலின மக்களையும் திமுகவிடம் அடமானம் வைத்துள்ளார் என்று கடுமையாக விமர்சித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய ஆளும் திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu