அங்கன்வாடி சங்கத்தினர் சாலை மறியல்!

அங்கன்வாடி சங்கத்தினர் சாலை மறியல்!
X
கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் அங்கன்வாடி சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி தங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் மருத்துவ கல்லூரி அருகில் சென்னை திருப்பதி தேசிய சாலையில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரங்கநாதன் உஷாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சிவா அனைவரையும் வரவேற்றார் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சுப்பிரமணி கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.

இந்தப் போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் தேர்தல் கால வாக்குறுதிகளை வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதற்கு இணையான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6.750 அகவிலை படியுடன் வழங்க வேண்டும், சுமார் பத்து வருடம் பணி முடித்து சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசின் அனைத்து துறை காலி பணியிடங்களில் 50 சதவீதம் முன்னுரிமை அளித்து பணியில் அமர்த்திட வேண்டும், மகளிர் சுய உதவி குழுக்களும் மூலம் காலை சிற்றுண்டி உணவு வழங்குவதை கைவிட்டு சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்களை மூலமாக காலை சிற்றுண்டி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 75 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர் இதனைத் தொடர்ந்து 75 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து மாலை அவர்களை விடுவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!