ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு!

ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு!
X
பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு! போலீஸ் விசாரணை.

.பெரியபாளையம் அருகே ஆற்றில் அழகிய நிலையில் சடலம் மீட்பு. கடந்த 4.நாட்களுக்கு முன் காணாமல் போனவர் தேடப்பட்டு வரும் சடலம் கண்டெடுப்பு.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (38). இவர் கடந்த 4.நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில், பல்வேறு இடங்களில் இவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் காரணி, புதுப்பாளையம் செல்லும் ஆரணியாற்றின் தரைப்பாலம் அருகே அழுகிய நிலையில் சடலம் ஒன்று மிதந்தது. இதனை கண்ட பொதுமக்கள் இது குறித்து பெரியபாளையம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆரணி ஆற்றில் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். காணாமல் போனவர்கள் பட்டியலை கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தியதில் சடலமாக மீட்கப்பட்டது குமரேசன் என உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரியபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா, யாரேனும் கொலை செய்து ஆற்றில் வீசினாரா, தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!