பேருந்து படிக்கட்டில் சாகசம்! சிறுவர்களை எச்சரித்த காவல்துறையினர்

பேருந்து படிக்கட்டில் சாகசம்!  சிறுவர்களை  எச்சரித்த காவல்துறையினர்
X

பேருந்து படிக்கட்டில் சாகசம் செய்த மாணவர்களை எச்சரித்து அனுப்பிய காவல்துறையினர்

திருவள்ளூர் அருகே பேருந்தில் படிக்கட்டில் சாகசம் செய்த சிறுவர்களை எச்சரித்தும் பொருட்படுத்தாமல் வந்ததால் ஓட்டுநர் காவல் நிலையத்தின் முன்பு பேருந்து நிறுத்தி புகார் அளித்தார்

அரசு பேருந்து படிக்கட்டில் சாகசம் செய்த சிறுவர்களை கண்டித்தும் கேட்காததால் காவல் நிலையத்துக்கு பேருந்தை கொண்டு சென்ற ஓட்டுநர். சிறுவர்களை பிடித்து காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

திருவள்ளூர் பகுதியில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தினந்தோறும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் பேருந்து படிகளில் தொங்கியும் ஜன்னல்கள் மீது ஏறியும் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.

இதனால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கும் பெரிதும் சிரமம் அச்சமும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து திருவள்ளூர் நகரத்தில் இது போன்ற புகார்கள் காவல்துறையினருக்கும் பள்ளி நிர்வாகத்தினருக்கும் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் திருவள்ளூரில் இருந்து பென்னாலூர்பேட்டை பகுதிக்கு செல்லும் அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி பள்ளி மாணவர்களும், புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுவர்களும் ஆபத்தான முறையில் பயணம் செய்த போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர், மாணவர் மற்றும் சிறுவர்களை உள்ளே ஏறுமாறு பலமுறை எச்சரித்தும் ஏறாமல் ரகலையில் ஈடுபட்டு அட்டகாசம் செய்து வந்தனர்.

இந்நிலையில். பேருந்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையம் அருகே வந்த போது பேருந்தை ஓட்டுனர் நிறுத்தினர். இந்நிலையில் பேருந்தில் படியில் நின்று அட்டகாசம் செய்தவர்கள் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர்.

இதுகுறித்து ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவே ஆட்சியர் அலுவலகம் அருகே நின்ற காவல்துறையினர் அந்த சிறுவர்களை மடக்கி பிடித்து அவர்களை எச்சரித்து அவர்களின் முகவரியை பெற்று அனுப்பினர், இதன் காரணமாக அரசு பேருந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் பயணிகளை ஏற்றி சென்றது

Tags

Next Story
Weight Loss Tips In Tamil