விபத்தில்லா தீபாவளி : திருவள்ளூரில் விழிப்புணர்வு பிரசாரம்..!

விபத்தில்லா தீபாவளி : திருவள்ளூரில் விழிப்புணர்வு பிரசாரம்..!
X

விபத்தில்லா  தீபாவளி விழிப்புணர்வு பிரசாரத்தை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஒ.சுகபுத்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருவள்ளூரில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை கூடுதல் ஆட்சியர் சுக புத்திரா தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது குறித்த உறுதிமொழி கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஒ.சுகபுத்ரா முன்னிலையில் கல்லூரி மாணவர்களால் ஏற்கப்பட்டது.

இதில் பங்குபெற்ற கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மஞ்சப்பைகள் வழங்கினார்.இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஒலி அறிவுப்புகளுடன் கூடிய ஐந்து ஆட்டோக்கள் மூலம் இன்று முதல் (08.11.2023) மற்றும் 10-ஆம் தேதி வரை மூன்று தினங்களில் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி விழிப்புணர்வு பிரசாரத்தை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஒ.சுகபுத்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இதில் விபத்தில்லா, மாசில்லா தீபாவளி குறித்த துண்டு பிரசுரமும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.பின்னர் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியையும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சுகபுத்ரா கொட்டியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் புகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் த.மணிமேகலை மற்றும் உதவி பொறியாளர்கள், கி.ர.ஶ்ரீலேகா மற்றும் சு.சபரிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!