டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்; உதயநிதி ஸ்டாலின் வந்தால் தான் இறங்குவேன் என பிடிவாதம்

டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்; உதயநிதி ஸ்டாலின் வந்தால் தான் இறங்குவேன் என பிடிவாதம்
X
பூந்தமல்லியில் டவரில் ஏறிய பெண், உதயநிதி ஸ்டாலின் வந்தால் மட்டுமே, கீழே இறங்குவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
பூந்தமல்லி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் எடுக்க தாமதமானதால் டவரில் ஏறி பெண் தற்கொலை மிரட்டல் விடுத்தார், உதயநிதி ஸ்டாலின் வந்தால் தான் இறங்குவேன் என்று பிடிவாதம் செய்தார்.

சென்னை திருவேற்காட்டை சேர்ந்தவர் ராஜேஷ்(42), இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரியை சேர்ந்த ராஜூலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மனைவி சொந்த ஊருக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று திருவேற்காட்டிற்கு வந்த தனக்கு நகை மற்றும் பணம் வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டடதையடுத்து திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் பெண்கள் சம்பந்தப்பட்ட புகார் என்பதால் பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளிக்க அறிவுறுத்தினர்.

அதன்பிறகு பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்க சென்றுள்ளார். அப்போது போலீசார் புகாரை வாங்க கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் சுமார் 200 அடி உயரம் கொண்ட வாக்கி டாக்கி டவரின் மீது ஏறி அமர்ந்து கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அவரை கீழே இறக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த பெண் இறங்க மறுத்தார்.

இதையடுத்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு வந்து கையெடுத்து கும்பிட்டு இறங்க கூறினார்கள். ஆனால் அந்த பெண் இறங்க மறுத்துவிட்டார். இதையடுத்து அவரது கணவர் மற்றும் குழந்தைகள். உறவினர்கள் கதறி அழுதும் அந்த பெண் இறங்க மறுத்து விட்டார்.

மேலே எறி மீட்கச் சென்ற போலீசாரையும் மேலே வர விடாமல் தடுத்தார். எம்எல்ஏவாக உள்ள உதயநிதி ஸ்டாலின் வந்தால் தான் இறங்குவதாக தெரிவித்துள்ளார். சுமார் மூன்று மணி நேரமாக அந்த பெண்ணை டவரில் இருந்து இறக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

பின்னர் பூந்தமல்லி நகர திமுக செயலாளர் பூவை ரவிக்குமார் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டார். அவர் அந்தப் பெண்ணிடம், உதயநிதி ஸ்டாலின் அனுப்பியதாகவும், வீடியோ கால் மூலம் அவர் பேச தயாராக இருப்பதாகவும் அந்தப் பெண்ணிடம் சமாதானப் படுத்தி பேசினார்.

இதையடுத்து அந்தப் பெண் கீழே இறங்கினார். அதன் பிறகே போலீசார் உள்ளிட்ட அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!