பூந்தமல்லி: கட்டிடத்தில் பொருட்களை திருடும் நபர் -சிசிடிவியில் பதிவு

பூந்தமல்லி: கட்டிடத்தில் பொருட்களை திருடும் நபர் -சிசிடிவியில் பதிவு
X

வடமாநில இளைஞர் எலக்ட்ரானிக் பொருட்களை திருடும்போது சிசிடிவியில் பதிவான காட்சி.

பூந்தமல்லியில் கட்டுமான கட்டிடத்தில் இருந்து பொருட்களை திருடிச் செல்லும் நபரின் சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவானது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, லட்சுமிபுரம் சாலையில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இங்கு வட மாநிலத்தவர்கள் சிலர் இங்கேயே தங்கி கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தில் இருந்து அடிக்கடி பொருட்கள் திருடு போய் வந்தது. இதை கண்டறிய அதன் உரிமையாளர் கண்காணிப்பு கேமராவை வைத்தார்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கட்டிடத்திற்குள் வரும் சிறுவர்கள் கட்டிடத்தில் உள்ள விலை உயர்ந்த வயர்கள் ஆகியவற்றை அறுத்து எடுத்து செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த ஜங்சன் பாக்ஸ் உள்ளிட்ட ரூ.1லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருட்களையும் சிறுவர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் அளித்ததின் பேரில் பூந்தமல்லி போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்