பூந்தமல்லி:+12 பொதுத் தேர்வு ரத்து- பேராசிரியர் அப்துல்காதர் வரவேற்பு!

பூந்தமல்லி:+12 பொதுத் தேர்வு ரத்து- பேராசிரியர் அப்துல்காதர் வரவேற்பு!
X

பேராசிரியர் முகமது அப்துல் காதர்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்த அறிவிப்பிற்கு பேராசிரியர் அப்துல் காதர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மாணவர்கள் பாதுகாப்பு கருதி மாநில அரசு மிகவும் சரியான முடிவை எடுத்துள்ளதாக கல்வியாளரும், எழுத்தாளருமான பேராசிரியர் முகமது அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தற்போதைய காலகட்டத்தில் மத்திய அரசு சி.பி.எஸ்.சி தேர்வு ரத்து செய்தது போல மாணவர்கள் பாதுகாப்பு கருதி நீட் மற்றும் அனைத்து மத்திய அரசு நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்து மாணவர்களின் உயர்கல்விக்கு வழிவகை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!