முதல்வரின் தூய்மை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் தூய்மை பணியை துவக்கி வைத்த அமைச்சர் நாசர்

முதல்வரின் தூய்மை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் தூய்மை பணியை துவக்கி வைத்த அமைச்சர் நாசர்
X

பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சியில் முதல்வரின் தூய்மை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் தூய்மை பணிகளை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சியில் முதல்வரின் தூய்மை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் தூய்மை பணியை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சியில் முதல்வரின் தூய்மை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் தூய்மை பணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் தமிழக பால்வள்த் துறை அமைச்சர் சா.மு. நாசர் துவக்கி வைத்தார். பின்னர் பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், கழிவறை, உரக்கிடங்கு போன்றவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் திருவள்ளூர் மாவட்டத்தை தூய்மை மாவட்டமாக மாற்றுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் பூவிருந்தவல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 1000 கோடி மதிப்பில் ஒருகிணைந்த பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரவுள்ளாதாகவும் கூறினார்.

மேலும் தமிழகத்தில் கடந்த 10ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு ஆவின் பால் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு இருந்தது.

தற்போது உற்பத்தி பொருட்களை சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும் தற்போது தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதன் படி ஆவின் பாலில் உற்பத்தி செய்யக்கூடிய 152 பொருட்கள் விரைவில் தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஆவடியில் டெல்டா பிளஸ் தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனை கண்காணித்து வருவதாகவும் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil