பூவிருந்தவல்லியில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம், துவக்கி வைத்த அமைச்சர் சுப்ரமணியன்

பூவிருந்தவல்லியில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம்,  துவக்கி வைத்த அமைச்சர் சுப்ரமணியன்
X

பூவிருந்தவல்லி ஆரம்பசுகாதார நிலையத்தில்  நடந்த நிகழ்ச்சயில் அமைச்சர் மா.சுப்ரமணியன் குழந்தைகளுக்கு நியுமோகோக்கல், கான்ஜூகேட் தடுப்பூசி போடும் திட்டத்தை  தொடங்கிவைத்தார். 

பூவிருந்தவல்லியில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

பூவிருந்தவல்லி வட்டம், பூவிருந்தவல்லி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நியுமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசிகளை பச்சிளம் குழந்தைகளுக்கு போடும் திட்டத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

இதில் அரசு முதன்மை செயலாளர் பொது சுகாதாரம் (ம) நோய் தடுப்பு துறை . ராதாகிருஷ்ணன் ,திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, இயக்குநர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை செல்வநாயகம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!