பூந்தமல்லியில் 3 இடங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்.. கிருஷ்ணசாமி எம்எல்ஏ பங்கேற்பு...
பூந்தமல்லியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில், தமிழக்தில் உள்ள 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட 3 இடங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
குத்தம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் தேசிங்குராஜா தலைமை தாங்கினார். இதில், தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநில ஆதிதிராவிட நலக்குழு செயலாளருமான கிருஷ்ணசாமி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில், நிர்வாகிகள் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து, ஒன்றிய நிர்வாகிகள் கந்தபாபு, அண்ணகுமார், கந்தன், குணாசேகர், சுகுமார், கருணாநிதி, பரணிதரன், பிரதிப், பிரவின் குமார், கவிஞர் ராஜேஷ், அருள் அசோக், சீதாபதி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதே போல் கொரட்டூர் ஊராட்சி புதுசத்திரம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியிலும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் குணசேகர், சுமதி விஜயகுமார், கோபிநாத், வார்டு உறுப்பினர்கள் ரம்யா, காமாட்சி கோவிந்தராஜ், செந்தில், டில்லிபாபு, ஆறுமுகம், கோவிந்தராஜ், கல்பனா தேவராஜ், ராஜேஷ், யமுனாதேவி பாரதிராஜா , சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து கூடப்பாக்கத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம், வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கி பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி வழங்கினார். நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் சேட்டு, சுப்பிரமணி சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu